தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்
இலங்கை தமிழர்களை மணல் திட்டிலிருந்து மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மன்னார்; மாவட்டம் பேசாலையை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி, புலக்ஷன்,கணுவியா, சசிக்குமார், சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரே இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு படகில் புறப்பட்டு இன்று (17) காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல்; மணல் திட்டில் சென்றிறங்கியுள்ளனா். குறித்த 6 பேரும் விசாரணைக்கு பின்னா் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது