173
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 390 கிராம் போதைப்பாக்கினை காவல்துறையினர் மீட்டதுடன் கடை உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த கடைக்கு விரைந்த காவல்துறையினர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதை கலந்த 390 கிராம் பாக்கினை கைப்பற்றியதுடன் , உரிமையாளரான 30 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
Spread the love