தமிழர் மரவுரிமைச் சின்னங்களை அதன் தனித்துவம் மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை மையமானது வரலாற்றுத் தொன்மை மிக்க நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் புனரமைக்கும் பணியினை நேற்றைய தினம் ஆரம்பித்துள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியுடனும், அனுமதியுடனும் , நன்கொடையாளர்கள் மூலம் யாழ்ப்பாண மரவுரிமை மையத்திற்கு கிடைத்த நிதியில் நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் மந்திரிமனையுடன் சேர்ந்து வளர்ந்துள்ள மரமானது மந்திரிமனையின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் அதன் உறுதித்தன்னையினை சீர்கெடாமல் பாதுகாக்கும் நோக்குடன் வெட்டப்பட்டு மருந்து ஏற்றும் செயற்பாடு நடைபெற்று வருகின்றது.