200
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32 , 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50 , 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் தெல்லிப்பளை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Spread the love