செயல் திறன் அரங்க இயக்கத்தால் அதன் இருபதாவது ஆண்டு நிகழ்வுகளின் ஒரு அங்கமாக மீண்டும் நாடகப்பயிற்சிகள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுககளில் குழந்தை ம. சண்முகலிங்கம், தேவநாயகம் தேவானந்த் ஆகியோரை பிரதம வளவாளராகக் கொண்டு ஐந்து பயிற்சிப்பிரிவுகளாக பலருக்கு நாடகப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அவ்வாறு பயிற்சி பெற்ற பலர் செயல்முனைப்புள்ள நாடகச் செயற்பாட்டாளர்களாக தற்போதும் களத்தில் உள்ளார்கள். அதன் தொடர்ச்சியாகவே இந்தப்பயிற்சிகள் ஆரம்பமாகின்றன.
பயிற்சி நல்லூர் குறுக்கு வீதியில் உள்ள செயல் திறன் அரங்க இயக்கத்தின் மண்டபத்தில் நடைபெறும். பயிற்சியை சிறந்த நாடகப்பயிற்றுவிப்பாளர்கள் வழங்குவார்கள்.
வாராந்தம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிற்சி நெறி 90 மணித்தியாலங்கள் கொண்ட பயிற்சியாக நான்கு மாதங்கள் நடைபெறும்.
பயிற்சி முடிவில் பங்குபற்றுபவர்கள் தாமே ஒரு நாடகத்தை எழுதி நெறிப்படுத்தித் தயாரிப்பார்கள். பயிற்சியைத் திருப்திகரமாக முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என செயற்திறன் அரங்கம் இயக்கத்தினர் தெரிவித்துள்ளதுடன், மேலதிக தகவல்களுக்கு 0773112691 எனும் வட்ஸ்அப் விளக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.