Home இலங்கை சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்து வைப்பு

சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்து வைப்பு

by admin

வடக்கு மாகாண ஆளுநாின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்திய சாலையில் இடம் பெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம். சமன் பந்துலசேன கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மாகாண ஆணையாளர் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் நிலையத்தின் திரு ஆர் குருபரன், சான்று பெற்ற பாடசாலையின் அதிபர் எஸ் புவனேந்திரன், அச்சுவேலி காவல்நிலைய பொறுப்பதிகாரி காவல்துறைப் பரிசோதகர் பிரபாத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் கட்டணம் செலுத்தி தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் ஆயுர்வேத மருந்துகளையும் வாங்கிச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More