தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு கொழும்பில் நேற்று நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு கொழும்பு – பித்தலை சந்தியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் தற்போது சிறையில் உள்ளாா்.
சிறையில் இருந்தவாறே எழுதிய ஆதுரசாலை என்ற புத்தகத்திற்கே இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் இருந்தவாறே அவா் 8 புத்தகங்களை எழுதியுள்ள நிலையில் குறித்த 8 புத்தகங்களும், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வுக்கு, பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது