முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தோல்விக்குக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஸவே காரணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று (31.10.22) செய்தியாளர்களிடம் பேசிய சன்ன ஜயசுமண, கோட்டாபய ராஜபக்ஸ கட்சியின் ஆலோசனைக்கு செவிசாய்த்து அதன்படி செயல்படுவார் என பொதுஜன பெரமுன எதிர்பார்த்தது.
“முதல் சில மாதங்கள் கோட்டாபய ராஜபக்ச அவ்வாறு செயற்பட்ட போதிலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளை அவர் புறக்கணித்தார்,”
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் சில குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை மாத்திரமே கோட்டாபய ராஜபக்ஸ செவிமடுத்ததாகவும், அதனால் தான் கோட்டாபய ஜனாதிபதியாக தோல்வியடைந்ததாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு செவிசாய்த்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஸ தோல்வியடைந்திருக்க மாட்டார் என்றும் அவர் கூறினார்