யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 40 வயதுடைய பெண்ணொருவரும் , 35 வயதுடைய ஆணொருவரும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 20 லீட்டர் கசிப்பு , 50 லீட்டர் கோடா, கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுவதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை சுற்றி வளைத்த புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் கோப்பாய் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.