பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம் ரான் கான் தலைமையில் நடத்தப்பட்ட அரசுக்கெதிரான பேரணியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இம்ரான் கான் காயமடைந்துள்ளாாா்.
பேரணியில் இம்ரான் கான் திறந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது இவ்வாறு ப்பாக்கிப்பிரயோகம் முற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது இம்ரான்கானின் காலில் காயம் ஏற்பட்டதுடுன் அவரது கட்சியான பிடிஐ யைச் சோ்ந்த சிலரும் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இம்ரான் கான் பாதுகாப்பாக குண்டு துளைக்காத வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதனையடுது அப்பகுதியில் காவல்துறையினா் குவிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது