180
வவுனியா நொச்சிமோட்டை பலத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இரவு 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love