164
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை உடனடியாக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம், இன்று (10.11.22) உத்தரவை பிறப்பித்துள்ளது.
அவரை, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபடுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 12(1), 13(1) மற்றும் 13(2) ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் அடிப்படை உரிமைகள் மீறல் மனுவை ஜனவரி 31ஆம் திகதி பரிசீலிக்கவும் நீதியர்சர்களான விஜித் மலல்கொட மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய குழாம் தீர்மானித்துள்ளது.
Spread the love