149
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள யாழ் இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று காலை யாழ் இந்திய துணை தூதுவரினால் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் மற்றும் தடவியல் காவல்துறையினர் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love