146
மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை, உயிர்காப்பு வசதிகளைக் கொண்ட Ford நோயாளர் காவுவண்டி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நோயாளர் காவு வண்டியை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் பெற்று கொண்டு,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர தேவைகளுக்காக இன்று(15) செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மத தலைவர்கள்,மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணியாளர்கள்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love