175
வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்லுண்டாய்பகுதியில் நடைபெற்றது.
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பிரதி மாகாணப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கணக்காளர் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதி மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த மரம் நடுகை விழாவினை விவசாய திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் மீன்பிடி பிரிவு ஆகிய இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. மர நடுகை விழாவிற்கான ஒத்துழைப்பினை மரம் நடுகை இடங்களின் உள்ளூராட்சி சபைகள் வழங்கியிருக்கின்றன. குறித்த மரம் நடுகை நிகழ்வானது வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
—
Spread the love