177
யாழ்ப்பாணம் செம்மணி குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாயன்மார்கட்டை சேர்ந்த உத்தமதாசன் சுஜந்தன் (வயது 23) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் புதன்கிழமை செம்மணி குளத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணமால் போயிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்படையினரின் உதவியுடன் குளத்தினுள் தேடிய போது, குளத்தினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Spread the love