186
சோமாலியா எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விவசாயம் மீன்பிடித்துறையை கொண்டிருந்த போதும் அந்த நாட்டினுடைய வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் மக்கள் இன்று பஞ்சம் பசி பட்டிணியால் செத்து மடிகின்றனர். இதே போன்ற நிலை 25 வருடத்திலோ 50 வருடத்திலோ இங்குள்ள மக்களும் எதிர்கொள்ளும் நிலையே காணப்படுகின்றது என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்பம் தெரிவித்தார்.
யாழ் ஊடக ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
வலி.வடக்கில் பூர்விமாக இருந்த மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களிடம் இருந்து பறிக்கப்படுகின்றது.அப்பகுதி மக்கள் தொழில் செய்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்நிலையில் எதிர்காலத்தில் பருத்தித்துறை துறைமுகத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்ய முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றது. பருத்தித்துறை துறைமுகமானது சர்வதேசத் தரம் வாய்ந்த ஒன்றாக அபிவிருத்தி செய்யப்படும் சூழலில் அதனை பயன்படுத்தக்கூடிய ஆளுமையும் ஆற்றலும் எங்களுடைய கடற்றொழில் மக்களிடம் இல்லை.இதனால் அந்தப் பிரதேசத்தில் அப்பகுதி மீனவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலை இருக்கின்றது.
ஆழ்கடல் மீன்பிடியை முடக்குவதை இலக்காக கொண்டு சில நிறுவனங்கள் பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றது. பத்து வருடங்களுக்கு பின்னர் கடலில் மீன் பிடிக்க முடியாது என்று பண்ணை வளர்ப்பை ஊக்குவிக்கின்ற பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த நிலைப்பாட்டை பார்க்கும்போது கரையோர பிரதேச மீனவ மக்களுடைய எதிர்காலம் பாரிய படுகுழியில் தள்ளப்படக்கூடிய அபாயம் இருக்கின்றது.
எத்தனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பலரும் மீன்பிடித் தொழில் செய்து வரும் நிலையில் இன்னும் ஒரு பத்து வருடத்தில் கடலில் மீன் பிடிக்க முடியாது என்கிற பொய்யான கருத்து பரப்பப்படுகிறது. பண்ணை வளர்ப்பு மீன் பிடிமுறையால் எதிர்காலத்தில் பாரிய வாழ்வாதாரப் பாதிப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன் பொருளாதார நெருக்கடியையும் எதிர்நோக்க போகின்றோம்.
சோமாலியா எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விவசாயம் மீன்பிடித்துறையை கொண்டிருந்த போதும் அந்த நாட்டினுடைய வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் மக்கள் இன்று பஞ்சம் பசி பட்டிணியால் செத்து மடிகின்றனர். இதே போன்ற நிலை 25 வருடத்திலோ 50 வருடத்திலோ இங்குள்ள மக்களும் எதிர்கொள்ளும் நிலையே காணப்படுகின்றது.
ஆகவே இந்த விடயம் தொடர்பாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தெளிவாக செயற்ப்படுகின்றது. நாட்டினுடைய வளத்தை மக்களுடைய எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் கருத்துக் கொண்டு எங்களுடைய அரசியல் தலைவர்களோ அரசியல் கட்சிகளோ ஆக்கபூர்வமான எதிர்காலச் செயற்பாடுகள் ஒன்றையும் செய்யவில்லை. தமிழ் மக்கள் உரிமைக்காக போராடுகின்ற விடயங்களுக்கு அப்பால் நாட்டினுடைய வளங்களை பல்தேசிய கம்பெனிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தோடு தொடர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கின்றோம் – என்றார்.
மேலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வெள்ளிவிழா எதிர்வரும் 20ஆம் திகதி
நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என்றார்.
Spread the love