154
,
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் “கார்த்திகை வாசம்” என்ற மலர்க் கண்காட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள மலர்க் கண்காட்சி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் நவம்பர் 27 ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா.சண்முகலிங்கனும் சிறப்பு விருந்தினர்களாகச் சமூகச் செயற்பாட்டாளர் ம.செல்வின் இரேனியஸும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் ச.ரவியும் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மரநடுகை மாதத்தைச் வருவதோடு, மலர்க்கண்காட்சி ஒன்றையும் நடத்தி வருகின்றது.
Spread the love