211
யாழ்ப்பாணம் நவாலி மூத்தவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கிணறொன்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நவரத்தினம் சுரேஷ் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கிணற்றடியில் நின்ற போது நிலை தடுமாறி கிணற்றினுள் விழுந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக இளைஞனை மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love