யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட J/81கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பணிபுரையின் கீழ் பொது மக்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது
குறித்த டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தில் கொட்டடி பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் பங்கேற்றதோடு இராணுவம், பொலிசார் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அப்பகுதி கிராம சேவையாளர் என பலரும் கலந்து கொண்டு டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவாக வீதியில் காணப்பட்ட, நீர் தேங்கி நிற்கக் கூடிய போத்தல்கள், ரின்கள, புற்கள்,குப்பைகள் என்பவற்றை அகற்றினார்கள்.