184
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தாக ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்தே குறித்த எம்.பியை நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார்.
மேலும், இன்றைய சபை அமர்வுகளில் அவரை கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் 79இற்கு அமைவாகவே இந்த கட்டளையை பிறப்பித்ததாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை தாக்குவதற்கே அவர் முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
Spread the love