190
மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நிலையில், கோப்பாய் துயிலும் இல்ல பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வீதிச்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் எதிர்வரும் 26ஆம் திகதியும் மாவீரர் நாள் மறுநாள் 27ஆம் திகதியுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது
—
Spread the love