205
யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் ஒரு பவுண் தங்க தோடுகள் இரண்டு, 30 அங்கர் பால்மா பெட்டிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.
குறித்த வீட்டில் வசிப்போர் வேலை நிமித்தம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வெளியே சென்ற சமயம் வீட்டின் வளவினுள் அத்துமீறி நுழைந்த திருடர்கள் , வீட்டின் கதவை உடைத்து, வீட்டினுள் புகுந்து திருட்டில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love