209
இன்றையதினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பிக்கு சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரா் மற்றுமொரு வழக்காக எதிர்வரும் டிசெம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட தேரா் வேறொரு வழக்குக்காக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் முன்னிலைப்படுத்தியபோதே அவரை இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் கல்வியமைச்சுக்கு அருகில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love