227
இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட தடை விதித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை அவருக்கு ஐயாயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதத்தினையும் விதித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது ஒப்பந்த விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் போதுது, சாமிக்க கருணாரத்ன தனக்கெதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
Spread the love