191
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாவாற்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப் பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 92ஆவது குருபூசை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகம், பூஜையுடன் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும், சபா மண்டபத்தினுள் உள்ள உருவப் படத்துக்கும் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மலர்மாலை அணிவித்து, வணக்கம் செலுத்தினார்.
Spread the love