154
Solidarity Center நிறுவனத்தின் அனுசரனையில் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச்சூழல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அலுவலக வேலைச்சூழலில் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அலுவலர்களுக்கு காணப்படும் பிரச்சினைகள், தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவது தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் அலுவலர்களால் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான சாதகமான தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கூறினாா்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கி.தயாபரி, மாவட்ட இணைப்பாளர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சு.லேணுகாராணி மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Spread the love