171
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலையிலிருந்து நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் வரையில் 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரி என் சூரியராஜ் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
38 குடும்பங்களைச் சேர்ந்த142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 சிறுதொழில் முயற்சியாளர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். சண்டிலிப்பாயில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம், உடுவில் பகுதியில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலைய பெண்கள் விடுதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
அத்துடன், நல்லூர் ,பருத்தித் துறை , ஊர்காவற்துறை மற்றும் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளது. மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக நாளைய தினம் சனிக்கிழமை வரை எதிர்பார்க்கப்படுவதனால் பொதுமக்கள் தமக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தார்,
Spread the love