185
வெப்பநிலை குறைந்து குளிரான நிலை காணப்படுவதால் வடக்கு மாகாண மக்கள் அவதானமாக செயல்படுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் ஏனென்றால், தற்போதைய காலநிலை மாற்றத்தின் காரணமாக எமது நாட்டிலும் குளிர் அதிகளவில் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, வெப்பநிலை 18 செல்சியஸ் ஆக குறைவடைந்து சென்றுள்ளதனால் பல மாடுகள் உயிரிழந்துள்ளன.
குறிப்பாக இந்த காலநிலை மாற்றத்துடன் வளி மண்டலம் மாசடைந்த நிலைமை காணப்படுகின்றது. நேற்று முன்தினம் சற்று அபாய நிலையினை அடைந்து, நேற்று குறைந்திருந்து. இன்று மீண்டும் அதிகரித்துள்ள நிலை காணப்படுகின்றது. அதனால் இந்த டிசம்பர் மாதம் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
குறிப்பாக இந்த காலத்தில் வெளியில் செல்வோர் கூடுதல் கவனம் எடுத்தல் நல்லது. பெரியோர்கள், சிறுவர்கள் முகக் கவசம் அணிந்து செல்வது மிகவும் நல்லது. இதய நோய் உள்ளவர்களும் இந்த விடயத்தில் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.
Spread the love