197
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லியடி திருமகள் சோதி வீதியை சேர்ந்த பூ. கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாகவும், விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
Spread the love