208
யாழ்ப்பாணத்தில் மஞ்சளுடன் கைதான இருவருக்கும் மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்படம் அறவிட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மஞ்சளை அரசுடமை ஆக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த கடந்த 2 ஆயிரத்து 448 கிலோகிராம் மஞ்சளுடன் சுதுமலை பகுதியை சேர்ந்த இருவர் மானிப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , விசாரணைகளில் போது இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிட்ட மன்று , சான்று பொருளாக மன்றில் சமர்ப்பித்த 2448 கிலோ மஞ்சளையும் அரசுடைமையாக்குமாறு உத்தரவிட் டது.
Spread the love