244
மன்னார் பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்த மாற்று திறனாளிகள் தின விழா இன்று வியாழக்கிழமை (15) காலை 10.30 மணியளவில் மன்னார் கலையருவி மண்டபத்தில் இடம்பெற்றது.
-மன்னார் பிரதேசச் செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் கலந்து கொண்டார்.
விருந்தினர்களாக மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் கே.மகேஸ்வரன்,மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கில்றோய் பீரிஸ்,மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் மறுவாழ்வு சங்க இயக்குனர் அருட்சகோதரி ஜோசப்பின் மேரி உட்பட அழைக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றாற்றல் கொண்ட மாணவர்கள், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாற்று திறனாளிகள் தின விழாவையொட்டி நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, விருந்தினர்களினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Spread the love