182
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. இந்நிலையில் குறித்த படகை கரை சேர்ப்பதற்காக கடற்படையினரின் மீட்பு படகுகள் அப்பகுதியை நோக்கி சென்றுள்ளது.
கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு கொடுத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் மீட்பு பணிக்கு சென்றுள்ளனர்.படகில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக கப்பல் கரைக்கு வந்த பின்னரே மேலதிக விவரங்களை அறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை படகில் இருப்பவர்கள் மியன்மாரை சேர்ந்தவர்கள் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love