229
36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கிண்ணத்தினை அர்ஜென்டினா வென்றுள்ளது. இன்று நடைபெற்ற 22 ஆவது உலக கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் போட்டியிட்ட நிலையில் இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்றுள்ளது.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் ஆரம்பமாகியது. லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சம்பியனான பிரான்சும், அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love