206
இராணுவத்தினரால் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி போராடி வந்த தாயொருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன் சோதி (வயது 70) என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது மகனை கடந்த 1996ஆம் ஆண்டு புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் வைத்து இராணுவத்தினர் கைது செய்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்.
அந்நிலையில் இவர் தனது மகனை தேடி கடந்த 26 வருட காலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். அதனால் உடல் நல பாதிப்புக்களை எதிர்கொண்டு வந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்தார்.
Spread the love