ஆண்டுதோறும் கால்பந்து உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கெளரவிக்கும் விதமாக கோல்டன் பூட், கோல்டன் போல் மற்றும் கோல்டன் குளோவ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் அதிக கோல்களை அடித்த வீரருக்கு ´கோல்டன் பூட்´ விருதும், சிறப்பாக விளையாடிய வீரருக்கு ´கோல்டன் போல்´ விருதும், சிறந்த கோல் கீப்பருக்கு ´கோல்டன் குளோவ்´ விருதும் வழங்கப்படும்.
1930ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகளை இதுவரை பல முன்னணி கால்பாந்தாட்ட வீரர்கள் வென்றுள்ளனர்.
அந்தவகையில் கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஹாரி கேன் 6 கோல்களை அடித்து ´கோல்டன் பூட்´ விருதை வென்றிருந்தார்.
இதையடுத்து குரோஷியா அணியைச் சேர்ந்த லூகா மோட்ரிச் ´கோல்டன் போல்´ விருதையும், பெல்ஜியம் அணியைச் சேர்ந்த திபாட் கோர்டோயிஸ் ´கோல்டன் குளோவ்´ விருதையும் வென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது கோலாகலமாக நடைபெற்ற 2022ம் ஆண்டு 22வது கால்பந்து உலகக் கிண்ணத்தில் பிரான்ஸ் அணியைச் சேர்ந்த Kylian Mbappé 8 கோல்களை அடித்து´கோல்டன் பூட்´ விருதையும், ஆர்ஜன்டீனா அணித்தலைவர் மெஸ்ஸி கோல்டன் போல்´ விருதையும் மற்றும் அதே ஆர்ஜன்டீனா அணியைச் சேர்ந்த கோல் கீப்பர் Emiliano Martínez ´கோல்டன் குளோவ்´ விருதையும் வென்றுள்ளனர்