தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கைது செய்த கடற்படையினர் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் பேசாலை,வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.-குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) மாலை தலைமன்னார் காவல்துறையினரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.
இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு,16 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.