162
நிலக்கரி இருப்பு தற்போது நிறைவடைந்துள்ளதால், டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முழுமையாக நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் நிஹால் வீரரத்ன குறிப்பிட்டுள்ளாா். மேலும் இதன் காரணமாக சுமார் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டினை மேற்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love