10 மணிநேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நிலக்கரி இருப்பு தற்போது நிறைவடைந்துள்ளதால், டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முழுமையாக நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும், குறித்த கருத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவும் நேற்று உறுதிப்படுத்தியிருந்தநிலையில் அதற்கு பதிலளித்த மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் மின் கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், 10 மணிநேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் ஜனவரி மாதத்தில் 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு மாத்திரமே மின்வெட்டினை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பண்டிகை காலத்தை முன்னிட்டு டிசம்பா் 24, 25, 26 ,31 மற்றும் ஜனவரி 1 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது எனவும் அவா் தொிவித்துள்ளாா்.