உக்ரைன் ஒருபோதும் தனித்துவிடப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமைர் ஸெலென்ஸ்கைக்கு (Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியின் வௌ்ளை மாளிகை பயணத்தின் போதே அமெரிக்க ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ரஷ்யாவுடனான யுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை கூறமுடியாத நிலையில், அமெரிக்காவின் ஆதரவு உக்ரைனுக்கு தொடர்ந்தும் வழங்கப்படுமென பைடன் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் 45 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பின் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky மேற்கொண்ட முதலாவது வௌிநாட்டு பயணம் இதுவாகும்.