185
யாழ்ப்பாணம் காரைநகர் சாம்பல் ஓடை கடற்கரை பகுதியில் கருவாடு உலர விட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவரின் கழுத்தில் இராணுவ வீரர் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படு
சாம்பல் ஓடை கடற்கரையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கருவாட்டினை தொழி லாளி ஒருவர் உலர வைத்துக்கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு வந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தொழிலாளியால் , காரைநகர் கடற்தொழிலாளர் சங்கத்திற்கும் , அப்பகுதி கிராம சேவையாளருக்கும் தெரியப்படுத்தி யுள்ளார்.
குறித்த சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் , சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாகவும் காரைநகர் கடற்தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love