159
அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துனுவில வடக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கணபதி தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கல் மற்றும் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவா் உயிாிழந்துள்ளனா். இந்த அனா்த்தத்தின் போது வீட்டில் 5 பேர் இருந்ததாகவும் அதில் 18 மற்றும்19 வயதான இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அனர்த்த முகாமைத்துவ நிலையம் தொிவித்துள்ளது.
குறித்த பகுதி மக்கள் காவல்துறையினருடன் இணைந்து மண்ணை அகற்றி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love