217
யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 33 வயதான இளைஞனர் ஒருவர் நெல்லியடி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love