175
யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண காவல்நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபராக கடமையாற்றி வந்த விஜித குணரட்ண, தனது 38 வருட கால காவல்துறை சேவையினை இன்றைய தினத்துடன் நிறைவு செய்து ஓய்வு பெறுகின்றார். அதனை முன்னிட்டு, அவருக்கான பிரியாவிடை நிகழ்வுகள், யாழ் காவல்நிலைய மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி, ஏனைய மத தலைவர்கள் கலந்து கொண்டு ஆசி வழங்கியதுடன், காவல்துறை உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு , மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கு நினைவு பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது,
நிகழ்வில் யாழ்,காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், உதவி காவல்துறை அத்தியட்சகர்கள், யாழ் மாவட்ட காவல்நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Spread the love