173
யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு காவல்துறைப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனை காவல்துறையினா் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love