இலங்கைக்கு சென்றுள்ள அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 2006 ஆண்டில் ராஜ் ராஜரட்ணத்தின் நிதி உதவியில் இருதய சரித்திர சிகிச்சை பிரிவு எகோ இயந்திரம் உட்பட பல சேவைகளை புதிதாக ஆரம்பிக்க பெரும் உதவியாக இருந்ததென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவருக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.
அமெரிக்க உள்ளக தகவல்களை முறையற்ற விதத்தில் பெற்று, அமெரிக்க பங்குச்சந்தைக்கு வழங்கியதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினரால் 2009ல் கைது செய்யப்பட்டு, விசாரணைகளில் 14 குற்றசாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 2011ல் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 150 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு 08 வருட கால சிறைத்தண்டனையுடன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, மீதமான 2 வருட சிறைத்தண்டனை காலத்தை வீட்டில் கழிக்க முடியும் என விடுவிக்கப்பட்டார்.