196
யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று செல்வதனை அடுத்து அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செலயலகத்தின் கேட்போர் கூடத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் (காணி) மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் நீக்ளஸ்ப்பிள்ளை, விவசாயப் பணிப்பாளர் வாசுகி கமலலேஸ்வரன், சமுர்த்திப்பணிப்பாளர் திவாகரன் ப,உள்ளிட்ட பதவிநிலை உயர் அதிகாரிகள், பிரதேச செயலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அலுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love