167
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை 8.மணிக்கு புது வருட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.
இதன் போது கருத்து தெரிவித்த திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள்,,,
2023 ஆம் ஆண்டு இனிதே பிறந்திருக்கின்றது. சென்ற 2022 ஆம் ஆண்டிலேயே நமக்கு ஏற்பட்ட அனைத்து விதமான துன்பங்களும் இல்லாதொழிந்து பிறந்திருக்கிற இந்த ஆண்டிலே நன்மைகள் அனைத்தும் பன் மடங்கு பெருகி நோயற்ற வாழ்வு வாழ அருள் கிடைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Spread the love