216
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த குடும்பஸ்தர் சடலமாக இன்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளார். மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்புறமாக உள்ள வீட்டில் வசித்து வந்த கந்தசாமி பன்னீர்ச்செல்வம் (வயது 56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில்,கிராம சேவையாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , அவரும் அயலவர்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது சமையலறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர். உயிரிழந்தவரின் மனைவி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தமையால், தனியாகவே வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love