206
யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது யாழ்ப்பாணத்தவர்களுக்குரியது
இந்நிலையில் இன்றைய வெள்ளிக்கிழமை மதியம் யாழ். பல்கலைக்கழக கலைலாசபதி கலையரங்கில், நடைபெற்ற ” இலங்கை தமிழ் சினிமா நேற்று , இன்று , நாளை ” எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட ஒரு இயக்குனரை தவிர ஏனையோர் பெரும்பாலும் ஆங்கிலத்திலையே உரையாடி இருந்தனர். நிகழ்வை நடத்திய அனோமா பொன்சேகா ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடி இருந்தார்.
இது தொடர்பில் பார்வையாளர் ஒருவர் , ” இங்கே தமிழர்களே அதிகளவில் உள்ளனர். கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளவர்களும் தமிழ் மொழி பேச தெரிந்தவர்களாக உள்ள போது ஏன் ஆங்கிலத்தில் உரையாடல் இருக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த இயக்குனர் அனோமா , இது சர்வதேச திரைப்பட விழா அதனால் ஆங்கிலத்தில் உரையாடுவோம்” என தொனிப்பட பதில் அளித்தார்.
அதன் போது , சர்தேச திரைப்பட விழாவாக இருந்தாலும் , யாழ்ப்பாணத்தை பிரதி பலிக்கும் படங்கள் மற்றும் “யாழ்” இசைக்கருவி என்பவற்றை இலட்சனையாக (logo) விளம்பரப்படுத்தி “யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா” என்று யாழ்ப்பாணத்தில் நடத்தும் போது ,தமிழ் மொழியை புறக்கணிப்பது போன்று நடந்து கொள்வதுடன் , ஏன் தமிழ் மொழியில் உரையாடல் நடாத்தினீர்கள் என கேட்டதற்கு , “இதொரு சர்வதேச திரைப்பட விழா, அதனால் ஆங்கிலத்திலையே கதைப்போ ம்” என பதில் அளித்தது கண்டனத்திற்கு உரியது என பார்வையாளர் ஒருவர் கண்டனத்தை பதிவு செய்தார்.
அதேவேளை மற்றுமொரு பார்வையாளர் , திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வை அடுத்து திரையிடப்பட்ட சிங்கள மொழி திரைப்படத்தில் , பேருந்தில் பயணிக்கும் , தமிழ் குடும்பம் ஒன்றை சேர்ந்த சிறுவன் ஒருவர் இராணுவ சீருடையை ஒத்த சீருடை அணிந்து கையில் விளையாட்டு துப்பாக்கியுடன் பயணிப்பது போன்றதொரு காட்சி இருந்தது. அதற்கும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்.
அதேவேளை , கடந்த முறை யாழில் இருந்து முஸ்லீம் வெளியேற்றம் குறித்து படமாக்கப்பட்ட படம் குறித்து விமர்சனங்களை முன் வைத்த போது தன்னை “புலியின் வால்” கூறி தன்னை விமர்சித்து , தனது கருத்தை தெரிவிக்க விடாது தடுக்கப்பட்ட சம்பவத்தையும் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.
அத்துடன் தமிழ் சினிமா தொடர்பில் கதைக்கும் போது , நிதர்சனம் வெளியீடுகள் பற்றி எவரும் கருத்துக்களை முன் வைக்காதது கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
Spread the love